Sunday, September 20, 2020

COVID - 19 உதவி



ஸ்ரீமதே ராமாநுஜாய  நம

35 கிராம திருக் கோயில்  -  அர்ச்சக சகாயம் / உதவி
 நாள் : 20 - 09 - 2020   இடம் : வில்லியம் பாக்கம் 

                            



                  

ஹரி சரணம் என்கிற ஆனமீக அமைப்பு மூலமாக வில்லியம் பாக்கம் மற்றும் அதை சுற்றிய 35 கிராமப் புர கோவில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களுக்கு அனைவருடைய ஸஹாயத்தினால் Rs. 2000/- நிதியும்  25kg அரிசியும்  வழங்கப் பட்டது. 





Sunday, August 23, 2020

பஞ்ச ஸம்ஸ்கார வைபவம். 2020


                                                                             ஸ்ரீ:

ஸ்ரீமதே  ராமாநுஜாய நாம:

மதுராந்தகம் எனும் த்வயம் விளைந்த திருப்பதி 
பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்
வகுளாரண்ய க்ஷேத்திரம் எனும் மதுராந்தகத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராமானுஜருக்கு ஆவணி மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் பஞ்ச ஸம்ஸ்கார வைபவம். 
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தனது மன வருத்தத்தை தெரிவிக்க திருக்கச்சி நம்பிகளும் ஸ்ரீ தேவப் பெருமாளிடம் ஸ்ரீ ராமானுஜரின் மனக் குறையை தெரிவிக்க அதற்க்கு தேவப்பெருமாளும் 6 வார்ததைகள் அருளிச்செய்கிறார். 

அதில் 6வது வார்த்தை ஸ்ரீ பெரிய நம்பிகளை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ள வேண்டியது. அதனால் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் நோக்கி யாத்திரை மேற்கொள்கிறார். அங்கெ ஸ்ரீரங்கத்தில் அரங்கன் பெரிய நம்பிகளுக்கு ராமானுஜரை ஸ்ரீ வைஷ்ணவ சம்ரதாயத்தில் அழைத்துக் கொள்ள ஆணையிடுகிறார். இதை சிரமேற்கொண்ட ஸ்ரீ பெரிய நம்பிகள் காரிகிரிமேல் நின்று அனைத்துலகும் காக்கின்ற ஸ்ரீ தேவப்பெருமாளை சேவிக்க காஞ்சிபுரம் நோக்கி யாத்திரை மேற்கொள்கிறார்.  
வகுளாரண்ய க்ஷேத்திரம் எனும் மதுராந்தகத்தில் இரு மஹான்களும் சந்திக்க ஸ்ரீ பெரிய நம்பிகள் காஞ்சிபுரம் சென்று அங்கு ஸ்ரீ வைஷ்ணவருக்கான பஞ்ச ஸம்ஸகார வைபவத்தை வைத்துக் கொள்ளலாம் என கூற ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரின் பிரபந்தத்தை மேற்கோள் காட்டி இங்கே எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீ ஜனக வல்லி நயிகா சமேத ஸ்ரீ கருணாகரப் பெருமாள், ஸ்ரீ சீதா சமேத சக்ரவர்த்தி திருமகன் 
திருவாடி வாரத்தில் பஞ்ச ஸம்ஸ்கார வைபவம் நடைபெற பிரார்த்தித்தார். 

                


ஸ்ரீ பெரிய நம்பிகளும் மிக்க மகிழ்ந்து  பஞ்ச ஸம்ஸ்கார வைபவத்தை  வகுளாரண்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு ஆவணி சுக்ல பஞ்சமியில்
பஞ்ச ஸம்ஸ்காரத்தை  செய்து வைத்தார். இதனால் வகுளாரண்ய 
   க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த திருப்பதி என அழைக்கப்பட்டது 



   
                                                    

ஸ்ரீ பெரிய நம்பிகள்  ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்கார வைபவதில் 
5 ஸம்ஸ்காரங்களை செய்து வைத்தார் 
1) தாப ஸம்ஸ்காரம்
             இதில் சுதர்சனரை ஆவாஹனத்துடன்   ஹோமம் செய்து  அதை வலது தோளிலும் பாஞ்ச ஜன்யத்தை ஆவாஹனத்துடன்   ஹோமம் செய்து  அதை இடது தோளிலும் முத்திரை இடுதல்
2) புண்டர ஸம்ஸ்காரம்
             நமது சரீரத்தில் 12 இடங்களில் எம்பெருமான் பிராட்டி திருநாமங்களை சொல்லி திருமண ஸ்ரீசூர்ணம் இடுதல் 
3)தாஸ்ய ஸம்ஸ்காரம்
நமது பெயருடன் ஸ்ரீ ராமானுஜ தாசன் / தாசி என பெயர் இடுதல்
 4) மந்த்ர ஸம்ஸ்காரம்
இதில் அஷ்டாக்ஷரம் த்வயம் சரம ஸ்லோகம்  உபதேசம்  
5) யக்ஞய    ஸம்ஸ்காரம்
இதில்திருவாராதனம் மற்றும் தினசரி செய்ய வேண்டிய கர்மாக்களை ஆச்சார்யரிடத்தில் (ஆந்நிகத்தில்) தெரிந்து கொள்வது.

இந்த வைபவம்  குருபரம்பரையில் சொல்லப்பட்டுள்ளது.

          "எம்பெருமான் ஶ்ரீ லக்ஷ்மிநாதனின் பெரும் கருணைநம்மாழ்வார் என்னும் கரு மேகமாகநாதமுனிகள் என்னும் மலையின் (ஞான கிரி பர்வதம், விபண்டக மகரிஷி ஆஸ்ரமம்) மீது விழுந்து ,  உய்யக்கொண்டார்,(கிளியாறு) மணக்கால் நம்பிகள் (செய்யாறு) என்னும் இரண்டு அருவிகளாகவும், ஆளவந்தார் ,பெரிய நம்பிகள்,பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோஷ்டியூர் நம்பிகள்,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமாலை ஆண்டான் என்னும் ஆச்சார்ய (பெரு) அருள் வெள்ளம் 
ஶ்ரீ ராமானுஜர் என்னும் பெரிய ஏரியை நிரப்பின. அந்த வற்றாத ஏரியிலிருந்து 74 கால்வாய்கள் (ஊர்களுக்கு) (ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதி பதிகள்) மூலம் ஸ்ரீ வைஷ்ணவம் என்கிற பயிர்களுக்கு பாய்ந்து வருகிறது.

இந்த ராமானுஜர் என்னும் ஏரியைக்காத்துசம்பிரதாயத்துக்கு 

அளித்ததனால்  இவூர் எம்பெருமான் 

ஸ்ரீ கருணாகர பெருமாளுக்கு ஏரிகாத்தப் பெருமாள் என்கிற திருநாமம்

 பெரியோர்களால் அழைக்கப்படுகிறது. 

இவன் 
வில்லியம்பாக்கம் ரங்கராஜன் 
 



 

Friday, May 8, 2020

அத்திகிரி அருளாளர்






எம்பெருமானின் சகாயம் 

                       
                           பிரம்மா யாகம் செய்ய முற்பட்ட போது தனது மனைவியான சரஸ்வதியை அழைத்துவர பணித்தார். ஆனால் அவள் வராது போகவே சாவித்ரியை அழைத்து இந்த அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி இந்த யாகத்தையும் யாக வேதிகையையும் அழிக்க பெருவெள்ளமாக வந்து சேர்ந்தாள் இதனால் இவளுக்கு வேகவதி என்ற பெயர் ஏற்பட்டது இவளுடைய கோபத்தையும் வேகத்தையும் கண்ட ப்ரம்ம தேவன் எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்தார். எம்பெருமானும் இந்த பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக இந்த யாகசாலைக்கும் பெருகிவரும் வெள்ளத்திற்கும் நடுவே தனது படுக்கையான ஆதிசேஷனை கொண்டு ஒரு அரண் அமைத்து அதன்மேல் சயனித்துக்கொண்டார். 
         
                          இதனால் பெருவெள்ளம் தடுக்கப்பட்டது. இந்த வ்ருத்தாந்தத்தை ஸ்வாமி தேசிகன் தனது வேகா சேது 
ஸ்தோத்திரத்தில் பரக்க பேசுகிறார். இதனால் சரஸ்வதியின் கோபம் தணிந்து பிரம்மதேவன் செய்யும் இந்த அஸ்வமேத வேள்வியில் தானும் சேர்ந்து கொண்டாள். யாகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

Monday, May 4, 2020

Vedha Sammelanam - 2019






SRI RAGHAVARYA MAHA DESIKAN VIDVATH SADAS 
&
SRI VAISHNAVA BHAGAVADA SAMMAELAN

               650 years ago, Sri Srinivasa Perumal Sannithi was established by Sri Raghavarya Maha Desikan at Villiampakkam Village, Kancheepuram District. Every year in the month of June Brahmahotsavam (10 days festival) is celebrated grandly in the temple. 

               This year during Brahmahotsavam a Veda Vidvat Sadas was conducted in the name of Sri Raghavarya Maha Desikan from 13/06/2019 to 19/06/2019. 

               In all these 7 days 6 Veda Pandits chanted Yajur Veda everyday. 

               In the Veda Sadas on 16/06/19 nearly 50 Veda Ganapatees took part and chanted Rig, Yajur and Saama Veda. 

              In this sadas, Vedanta Vidwat Sadas was also held. This program of vidvat sadas was conducted successfully with the blessings of Lord Sri Srinivasa and Guru Sri Raghavacharya Maha Desikan. Many Pandits from various parts of South India participated in this vidvat sadas. Many people supported this vidvat sadas by donating as much as they could. 
              
              My Ananta Koti Pranams to all the Veda vedanta Pandits who took part in the parayanam and sadas and people who helped me in conducting the sadas sucessfully. 











Monday, April 27, 2020

விதை






விதை

திருப்பாணாழ்வார் திவ்ய சரிதம் 

திருவரங்கம்

ஆராதவருளமுதம்  பொதிந்த கோயில்
        அம்புயத்தோன்னயோத்தி மன்னற்களித்த கோயில்
தோளாததனிவீரன்   தொழுதகோயில்
        துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனெல்லாஞ் சேர்க்குமங்கோயில்
        செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்துந் தீர்க்குங்கோயில்
        திருவரங்கமென திகழுங்கோயில் தானே
                                                          ----- ஸ்வாமி தேசிகன்

கோயில் என்றால் திருவரங்கம் பெரிய கோயில். இதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இதை ருத்ரன் சொல்கிறார். நாராயணன் சதுர்முக பிரம்மாவை படைத்து வேதங்களை உபதேசம் செய்தான். நான்முகனும் தனக்கு வழங்கப்பட்ட ஸ்ருஷ்டியை செய்துகொண்டு இருக்கிறார். தன்னை படைத்த நாராயணனை அனுதினமும் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று அந்த நாராயணனை குறித்து தபஸ் மேற்கொள்கிறார். அப்போது பிரம்மாவிற்கு முன்பாக கருடனால் எழுந்தருளப்பட்டும் ஆதிசேஷனால் குடை பிடித்தும் சூரிய சந்திரர்கள் இருபக்கமும் சாமரம் வீச விஷ்வக் ஸேனர் தனது வேத்ர தண்டத்தை ஏந்தியபடி வந்தார். இப்படி பிரணவத்தின் ஸ்வரூபமாயும் தேஜோமயமாயும் விளங்கிய இந்த ரங்க விமானத்தை கண்ட பிரம்மன் விழுந்து வணங்கி அந்த விமானத்தில் கண் வளர்கின்ற ஸ்ரீரங்கநாதனையும் சேவித்தான

ஆத்யம் ஸ்வயம்வ்யக்தம் இதம் விமாநம் ரங்க ஸஜ்ஞகம் |
ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிச்ச சாளக்கிராமம் நைமிஷம் ||
தோதாத்ரி: புஷ்கரம் சைவநாராயணாச்ரம: |
அஷ்டௌ மே மூர்த்தயஸ் ஸாந்தி ஸ்வயம் வ்யக்தா மஹீதலே ||
        
            இந்த தானாகத் தோன்றிய ஷேத்திரங்களில் உயர்ந்ததும் முதன்மையானதும் ஸ்ரீரங்க விமானமேஇந்த விமானத்தை விஸ்வகர்மாவுடன் சேர்ந்து சத்திய லோகத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்தான். பின்னர் தக்ஷ பிரஜாபதிகள் சுவாயம்பு மனு உள்ளிட்ட மனுக்களுடன் சேர்ந்து எம்பெருமானை பூஜித்து வந்தனர். பிரம்மாவிற்கு பிறகு விவஸ்வான், வைவஸ்வத மனு, இக்ஷ்வாகு என எம்பெருமானை ஆராதித்தனர். இக்ஷ்வாகு ஸ்ரீரங்க விமானத்தை பிரம்மாவின் அனுமதியுடன் அயோத்தியில் பிரதிஷ்டை செய்தான்.

இந்த வம்ஸத்தில் அவதாரம் செய்த எம்பெருமான், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் தானும் ஆராதித்து, தனக்கு சகாயம் செய்த விபீஷணனுக்கு எழுந்தருளப் பண்ணி கொடுத்தான்.
விபீஷணனால் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், ஸத்ய லோகத்தில் விரஜா நதிக்கரையில், அயோத்தியில் சரயு மற்றும் தமசா நதிகள் இங்கே காவிரி நதியின் வேண்டுகோளுக்கு இணங்க காவேரிக்கரையில் சந்திர புஷ்கரணி கரையில் பங்குனி மாதம் சுக்ல பக்ஷம் ரோகிணி நட்சத்திரத்தில் விபீஷணனால் ஸ்ரீரங்க விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இப்படி மேன்மை பொருந்திய ஸ்ரீரங்க விமானத்தை சுவாமி தேசிகன் திருவரங்கமெனத் திகழும் கோயில் தானே என தனது பிரபந்தத்தில் கொண்டாடுகிறார்.

தர்மவர்மன் எனும் சோழ மன்னரின் வம்சத்தில் வந்த அரசன் ஒருவன் காவிரி கரையின் வழியே பரிவாரங்களுடன் வந்து கொண்டு இருந்தான். கலைப்பு அதிகமானதால் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்த போது அந்த மரத்திலிருந்த கிளிகள்,

காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் வாசுதேவோ ரங்கேசய: பிரத்தியட்சம் பரமம் பதம் /


விமாநம் பிரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த பிரகாசக //


இடைவிடாமல் இதை திரும்பத் திரும்ப உறைத்துக்கொண்டிருந்தன

இதை கவனித்த மன்னன் மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அன்றிரவு மன்னன் கனவில் மணலால் மூடப்பட்டிருந்த ஒரு இடத்தில் அரங்கனின் ஸ்ரீரங்க விமானம் இருப்பதாக கண்டான். அந்த மணல்மேட்டை அகற்ற, அதில் அரங்கன் ரங்கவிமானத்தோடு இருப்பதைக் கண்டான். அரங்கனின் ஆலயத் திருப்பணியை மேற்கொண்டான்.



அந்த கிளிகளுக்காக மண்டபம் அமைத்து அதற்கு கிளி மண்டபம் எனும் பெயர் சூட்டினான்.



          இப்படியாக அரங்கனுக்கு திருப்பணி செய்து கிளி மண்டபம் அமைத்த சோழ மன்னனுக்கு கிளிச் சோழன் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரகத்திலிருந்து ஏழு சுற்றுக்களை (பிரகாரங்களை) கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது பூலோக வைகுண்டம் எனும் திருவரங்கம்.

இந்த எம்பெருமான் அரங்கனை ஆழ்வார்கள் (மதுரகவி ஆழ்வார் தவிர) அனைவரும் தங்களது திவ்யப் பிரபந்தத்தின் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளனர்.


காவேரி வர்ததாம் காலே காலே வர்ஷது வாசவ: /


 ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீ ஷ்ச வர்ததாம் //




Tuesday, April 21, 2020


ஸ்ரீ :

ஸ்ரீ ரங்கநாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மனே நம :
ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பரப்ரம்மனே நம:
ஸ்ரீ பெருந்தேவிநாயிகா சமேத ஸ்ரீ தேவாதிராஜா பரப்ரம்மனே நம :

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :                ஸ்ரீமதே வேதாந்த குரவே நம :