Monday, April 27, 2020

விதை






விதை

திருப்பாணாழ்வார் திவ்ய சரிதம் 

திருவரங்கம்

ஆராதவருளமுதம்  பொதிந்த கோயில்
        அம்புயத்தோன்னயோத்தி மன்னற்களித்த கோயில்
தோளாததனிவீரன்   தொழுதகோயில்
        துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனெல்லாஞ் சேர்க்குமங்கோயில்
        செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்துந் தீர்க்குங்கோயில்
        திருவரங்கமென திகழுங்கோயில் தானே
                                                          ----- ஸ்வாமி தேசிகன்

கோயில் என்றால் திருவரங்கம் பெரிய கோயில். இதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இதை ருத்ரன் சொல்கிறார். நாராயணன் சதுர்முக பிரம்மாவை படைத்து வேதங்களை உபதேசம் செய்தான். நான்முகனும் தனக்கு வழங்கப்பட்ட ஸ்ருஷ்டியை செய்துகொண்டு இருக்கிறார். தன்னை படைத்த நாராயணனை அனுதினமும் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று அந்த நாராயணனை குறித்து தபஸ் மேற்கொள்கிறார். அப்போது பிரம்மாவிற்கு முன்பாக கருடனால் எழுந்தருளப்பட்டும் ஆதிசேஷனால் குடை பிடித்தும் சூரிய சந்திரர்கள் இருபக்கமும் சாமரம் வீச விஷ்வக் ஸேனர் தனது வேத்ர தண்டத்தை ஏந்தியபடி வந்தார். இப்படி பிரணவத்தின் ஸ்வரூபமாயும் தேஜோமயமாயும் விளங்கிய இந்த ரங்க விமானத்தை கண்ட பிரம்மன் விழுந்து வணங்கி அந்த விமானத்தில் கண் வளர்கின்ற ஸ்ரீரங்கநாதனையும் சேவித்தான

ஆத்யம் ஸ்வயம்வ்யக்தம் இதம் விமாநம் ரங்க ஸஜ்ஞகம் |
ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிச்ச சாளக்கிராமம் நைமிஷம் ||
தோதாத்ரி: புஷ்கரம் சைவநாராயணாச்ரம: |
அஷ்டௌ மே மூர்த்தயஸ் ஸாந்தி ஸ்வயம் வ்யக்தா மஹீதலே ||
        
            இந்த தானாகத் தோன்றிய ஷேத்திரங்களில் உயர்ந்ததும் முதன்மையானதும் ஸ்ரீரங்க விமானமேஇந்த விமானத்தை விஸ்வகர்மாவுடன் சேர்ந்து சத்திய லோகத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்தான். பின்னர் தக்ஷ பிரஜாபதிகள் சுவாயம்பு மனு உள்ளிட்ட மனுக்களுடன் சேர்ந்து எம்பெருமானை பூஜித்து வந்தனர். பிரம்மாவிற்கு பிறகு விவஸ்வான், வைவஸ்வத மனு, இக்ஷ்வாகு என எம்பெருமானை ஆராதித்தனர். இக்ஷ்வாகு ஸ்ரீரங்க விமானத்தை பிரம்மாவின் அனுமதியுடன் அயோத்தியில் பிரதிஷ்டை செய்தான்.

இந்த வம்ஸத்தில் அவதாரம் செய்த எம்பெருமான், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் தானும் ஆராதித்து, தனக்கு சகாயம் செய்த விபீஷணனுக்கு எழுந்தருளப் பண்ணி கொடுத்தான்.
விபீஷணனால் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், ஸத்ய லோகத்தில் விரஜா நதிக்கரையில், அயோத்தியில் சரயு மற்றும் தமசா நதிகள் இங்கே காவிரி நதியின் வேண்டுகோளுக்கு இணங்க காவேரிக்கரையில் சந்திர புஷ்கரணி கரையில் பங்குனி மாதம் சுக்ல பக்ஷம் ரோகிணி நட்சத்திரத்தில் விபீஷணனால் ஸ்ரீரங்க விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இப்படி மேன்மை பொருந்திய ஸ்ரீரங்க விமானத்தை சுவாமி தேசிகன் திருவரங்கமெனத் திகழும் கோயில் தானே என தனது பிரபந்தத்தில் கொண்டாடுகிறார்.

தர்மவர்மன் எனும் சோழ மன்னரின் வம்சத்தில் வந்த அரசன் ஒருவன் காவிரி கரையின் வழியே பரிவாரங்களுடன் வந்து கொண்டு இருந்தான். கலைப்பு அதிகமானதால் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்த போது அந்த மரத்திலிருந்த கிளிகள்,

காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் வாசுதேவோ ரங்கேசய: பிரத்தியட்சம் பரமம் பதம் /


விமாநம் பிரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த பிரகாசக //


இடைவிடாமல் இதை திரும்பத் திரும்ப உறைத்துக்கொண்டிருந்தன

இதை கவனித்த மன்னன் மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அன்றிரவு மன்னன் கனவில் மணலால் மூடப்பட்டிருந்த ஒரு இடத்தில் அரங்கனின் ஸ்ரீரங்க விமானம் இருப்பதாக கண்டான். அந்த மணல்மேட்டை அகற்ற, அதில் அரங்கன் ரங்கவிமானத்தோடு இருப்பதைக் கண்டான். அரங்கனின் ஆலயத் திருப்பணியை மேற்கொண்டான்.



அந்த கிளிகளுக்காக மண்டபம் அமைத்து அதற்கு கிளி மண்டபம் எனும் பெயர் சூட்டினான்.



          இப்படியாக அரங்கனுக்கு திருப்பணி செய்து கிளி மண்டபம் அமைத்த சோழ மன்னனுக்கு கிளிச் சோழன் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரகத்திலிருந்து ஏழு சுற்றுக்களை (பிரகாரங்களை) கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது பூலோக வைகுண்டம் எனும் திருவரங்கம்.

இந்த எம்பெருமான் அரங்கனை ஆழ்வார்கள் (மதுரகவி ஆழ்வார் தவிர) அனைவரும் தங்களது திவ்யப் பிரபந்தத்தின் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளனர்.


காவேரி வர்ததாம் காலே காலே வர்ஷது வாசவ: /


 ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீ ஷ்ச வர்ததாம் //




Tuesday, April 21, 2020


ஸ்ரீ :

ஸ்ரீ ரங்கநாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரம்மனே நம :
ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பரப்ரம்மனே நம:
ஸ்ரீ பெருந்தேவிநாயிகா சமேத ஸ்ரீ தேவாதிராஜா பரப்ரம்மனே நம :

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :                ஸ்ரீமதே வேதாந்த குரவே நம :