
ஸ்ரீமதே ராமாநுஜாய நாம:
மதுராந்தகம் எனும் த்வயம் விளைந்த திருப்பதி
பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்
வகுளாரண்ய க்ஷேத்திரம் எனும் மதுராந்தகத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராமானுஜருக்கு ஆவணி மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தனது மன வருத்தத்தை தெரிவிக்க திருக்கச்சி நம்பிகளும் ஸ்ரீ தேவப் பெருமாளிடம் ஸ்ரீ ராமானுஜரின் மனக் குறையை தெரிவிக்க அதற்க்கு தேவப்பெருமாளும் 6 வார்ததைகள் அருளிச்செய்கிறார்.
அதில் 6வது வார்த்தை ஸ்ரீ பெரிய நம்பிகளை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ள வேண்டியது. அதனால் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் நோக்கி யாத்திரை மேற்கொள்கிறார். அங்கெ ஸ்ரீரங்கத்தில் அரங்கன் பெரிய நம்பிகளுக்கு ராமானுஜரை ஸ்ரீ வைஷ்ணவ சம்ரதாயத்தில் அழைத்துக் கொள்ள ஆணையிடுகிறார். இதை சிரமேற்கொண்ட ஸ்ரீ பெரிய நம்பிகள் காரிகிரிமேல் நின்று அனைத்துலகும் காக்கின்ற ஸ்ரீ தேவப்பெருமாளை சேவிக்க காஞ்சிபுரம்
நோக்கி யாத்திரை மேற்கொள்கிறார்.
வகுளாரண்ய க்ஷேத்திரம் எனும் மதுராந்தகத்தில் இரு மஹான்களும் சந்திக்க ஸ்ரீ பெரிய நம்பிகள் காஞ்சிபுரம் சென்று அங்கு ஸ்ரீ வைஷ்ணவருக்கான பஞ்ச ஸம்ஸகார வைபவத்தை வைத்துக் கொள்ளலாம் என கூற ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரின் பிரபந்தத்தை மேற்கோள் காட்டி இங்கே எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீ ஜனக வல்லி நயிகா சமேத ஸ்ரீ கருணாகரப் பெருமாள், ஸ்ரீ சீதா சமேத சக்ரவர்த்தி திருமகன்
திருவாடி வாரத்தில் பஞ்ச ஸம்ஸ்கார வைபவம் நடைபெற பிரார்த்தித்தார்.
ஸ்ரீ பெரிய நம்பிகளும் மிக்க மகிழ்ந்து பஞ்ச ஸம்ஸ்கார வைபவத்தை வகுளாரண்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு ஆவணி சுக்ல பஞ்சமியில்
பஞ்ச ஸம்ஸ்காரத்தை செய்து வைத்தார். இதனால் வகுளாரண்ய
க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த திருப்பதி என அழைக்கப்பட்டது
ஸ்ரீ பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்கார வைபவதில்
5 ஸம்ஸ்காரங்களை செய்து வைத்தார்
1) தாப ஸம்ஸ்காரம்
இதில் சுதர்சனரை ஆவாஹனத்துடன் ஹோமம் செய்து அதை வலது தோளிலும் பாஞ்ச ஜன்யத்தை ஆவாஹனத்துடன் ஹோமம் செய்து அதை இடது தோளிலும் முத்திரை இடுதல்
2) புண்டர ஸம்ஸ்காரம்
நமது சரீரத்தில் 12 இடங்களில் எம்பெருமான் பிராட்டி திருநாமங்களை சொல்லி திருமண ஸ்ரீசூர்ணம் இடுதல்
3)தாஸ்ய ஸம்ஸ்காரம்
நமது பெயருடன் ஸ்ரீ ராமானுஜ தாசன் / தாசி என பெயர் இடுதல்
4) மந்த்ர ஸம்ஸ்காரம்
இதில் அஷ்டாக்ஷரம் த்வயம் சரம ஸ்லோகம் உபதேசம்
5) யக்ஞய ஸம்ஸ்காரம்
இதில்திருவாராதனம் மற்றும் தினசரி செய்ய வேண்டிய கர்மாக்களை ஆச்சார்யரிடத்தில் (ஆந்நிகத்தில்) தெரிந்து கொள்வது.
"எம்பெருமான் ஶ்ரீ
லக்ஷ்மிநாதனின் பெரும் கருணை, நம்மாழ்வார் என்னும் கரு மேகமாக, நாதமுனிகள் என்னும் மலையின் (ஞான கிரி பர்வதம், விபண்டக மகரிஷி ஆஸ்ரமம்) மீது விழுந்து , உய்யக்கொண்டார்,(கிளியாறு) மணக்கால் நம்பிகள் (செய்யாறு) என்னும் இரண்டு அருவிகளாகவும், ஆளவந்தார்
,பெரிய நம்பிகள்,பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோஷ்டியூர் நம்பிகள்,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமாலை ஆண்டான் என்னும் ஆச்சார்ய (பெரு) அருள் வெள்ளம்
ஶ்ரீ ராமானுஜர் என்னும் பெரிய ஏரியை நிரப்பின. அந்த வற்றாத
ஏரியிலிருந்து 74
கால்வாய்கள் (ஊர்களுக்கு) (ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதி
பதிகள்) மூலம் ஸ்ரீ வைஷ்ணவம் என்கிற பயிர்களுக்கு பாய்ந்து வருகிறது.
இந்த ராமானுஜர் என்னும் ஏரியைக்காத்து, சம்பிரதாயத்துக்கு
அளித்ததனால் இவூர் எம்பெருமான்
ஸ்ரீ கருணாகர பெருமாளுக்கு ஏரிகாத்தப் பெருமாள் என்கிற திருநாமம்
பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.
இவன்
வில்லியம்பாக்கம் ரங்கராஜன்